காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா! – நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ பகவான்!!
காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா!
நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ பகவான்!!
பக்தர்களுக்கு அன்னதானம்!!!

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயம் திருக்கோவிலில் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது.
ஆலய அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூலவர் முத்தீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
மேலும் சுந்தரம் நாயக்கர் குடும்பத்தினரின் உபயத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கடம்பன், தசரதன், பாலச்சந்தர், ஏகாம்பரம் உள்ளிட்டோர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

