உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சத்யா சர்க்கரை நோய் மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சத்யா சர்க்கரை நோய் மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்த வருட உலக சர்க்கரை நோய் தினத்திற்காக உலக சுகாதார அமைப்பின் இந்த ஆண்டின் மைய கருத்தான “எல்லா வாழ்க்கை நிலைகளிலும் சர்க்கரை நோய்” என்ற வாக்கியத்தை காய்கள் மற்றும் பழங்களால் வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளதால், அவற்றை சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றினால் சர்க்கரை நோயின் பக்க விளைவுகளிலிருந்து சர்க்கரை நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக காஞ்சிபுரம் சர்க்கரை நோய் மையத்தின் இயக்குநர் டாக்டர்.சத்தியநாராயணன் தெரிவித்தார்.


