கப்பலோட்டிய தமிழன் வ உ சி நினைவு நாள்: தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை
தூத்துக்குடி: கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 89வது ஆண்டு நினைவு நாள். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 89வது ஆண்டு நினைவு நாள். தூத்துக்குடி மாவட்ட பழைய மாநகராட்சி முன்பு அமைந்துள்ள முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான சந்திர போஸ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், SC பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாச்சலம், முத்துராஜ், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமார முருகேசன், சரஸ்வதி நாதன், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி,வார்டு தலைவர்கள் மகேந்திரன், வாசி ராஜன், ஜோ பெர்னான்டோ, இருதயராஜ், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




