திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா

திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருமந்தூர் நகராட்சியில், திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி, விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும் திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவருமான தலைவர் SA.அருள்ராஜ், கலந்து கொண்டார்.

திருப்பெருமந்தூர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் முன்பு அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தனது சிறப்புரையில், “இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாளில், நான் பெரிதும் மதிக்கும் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடைய கரங்களால் திறந்து வைக்கப்பட்ட, அன்னை இந்திரா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.”

“அன்னை இந்திரா காந்தி நமது இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார். நமது காங்கிரஸ் பேரியக்கம் எப்பொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இயக்கம், திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியில் கூட, 15 வது வார்டில் முழுக்க முழுக்க மகளிருக்கு ஒதுக்கப்பட்டு மகளிர் காங்கிரஸ் கமிட்டியை அமைக்கப்பட்டுள்ளது.”

“மற்றொரு வார்டில், வார்டுகமிட்டி தலைவராக, பெண் தலைவரை நியமித்திருக்கிறோம், திருப்பெருமந்தூர் சிறுபான்மை துறை நகர தலைவியாக ஒரு பெண் தலைவரை நியமித்திருக்கிறோம்.”

“இப்படி திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி அன்னை இந்திராகாந்தியின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிற நகர காங்கிரஸ் கமிட்டியாக, இன்று புது பொலிவுடன்காணப்படுகிறது என்பதை பதிவு செய்து, அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாளில் , தலைவர் ராகுல் காந்தியின் வழியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்களின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் துணை இருக்கும் என்று பதிவு செய்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படப்பை விவேகானந்தன், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி சுனிதா பாய், காஞ்சிபுரம் மாவட்ட சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் K. முருகன் சாந்தகுமார், திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்: பவுல் ஆரோக்கியம், செல்வம் பூபாலன் யுவராஜ் நாராயணன், ஜீவரத்தினம் புவனேஸ்வரி, சீட்டுக்கடை சிவா, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி SCதுறை மாவட்ட செயலாளர் மனோகரன், திருப்பெருமந்தூர் நகர SCதுறை நகரதலைவர், தமிழரசன் வரதன், திருப்பெருமந்தூர் சிறுபான்மை துறை கிழக்கு வட்டார தலைவர் பிள்ளைப்பாக்கம் விக்டர் விநாயகம், திருப்பெரும்புதூர் சிறுபான்மை துறை நகரத் தலைவி, பவுலினா பவித்ரா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *