உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் மாணவ மாணவிகளுக்கு புதிய ஆடைகள்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் மாணவ மாணவிகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் கேக் வழங்கி கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகர இலக்கிய அணி சார்பில் தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் குமரவேல் ஏற்பாட்டில் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெருவில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள குப்புசாமி முதலியார் ஆரம்பப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் புத்தாடைகள் வழங்கி கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி. எஸ். ராமகிருஷ்ணன், மாநகர பொருளாளர் சுதா என்கின்ற சுப்பராயன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார்கள்.
இதில் மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் சந்தானம் சக்தி என்கின்ற தனசேகரன், சந்திரசேகரன், தலைவர் காசிம் பாஷா, துணைத் தலைவர் மாதவன், மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


