காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா : பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நான்காவது ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புத்தகத் திருவிழா கண்காட்சியில் பல்வேறு ஆன்மீகம் அறிவியல் மருத்துவம் சிறுவர்களுக்கு தேவையான புத்தகங்களை பார்வைக்கு வைத்து விற்பனை செய்து வருகிறது.
புத்தகக் கண்காட்சியில் இந்த சபை அறநிலையத் துறை சார்பில் அரங்கு வைக்கப்பட்டு ஆன்மீகம் மற்றும் கோவில் வரலாறு குறித்த புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சி அரங்கில் நாள்தோறும் புத்தக கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு கோவில் பிரசாதங்கள் மாலை வேளையில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வல்லக்கோட்டை முருகன் கோவில் சார்பில் புத்தகக் கண்காட்சியில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், வணிகவரித்துறை துணை ஆணையர் சந்திரசேகர், மண்டல தணிக்கை அலுவலர் நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கோவில் தல வரலாறு விபூதி குங்குமம் மற்றும் புளியோதரை கேசரி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியில் திருக்கோவில் தலைமை எழுத்தர் நித்ய கலா ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


