அரியலூர் மாவட்டத்தில் GK மூப்பனார் சிலைகளை திறந்து வைத்த GK வாசன்
அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜிகே மூப்பனார் சிலைகளை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

மாபெரும் மக்கள் தலைவர் ஜிகே மூப்பனார் அவர்களின் திருவுருவச் சிலைகளை, மக்கள் தளபதி ஜி கே வாசன் எம்.பி திறந்து வைத்து சிறப்புரையாற்றி வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில், கீழ்வண்ணம், சிலுப்பனூர், மேல ராமநல்லூர், ஏலாக்குறிச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து ஜிகே மூப்பனார் சிலைகளை ஜிகே வாசன் திறந்து வைத்தார்.
மேலும், திரளான மக்கள் மத்தியில் அவர் சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள், வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

