ராமநாதபுரம் அருகே கிருஷ்ணஜெயந்தி விழா: பெண்கள் நடனமாடி உற்சாகம்
 
					ராமநாதபுரம் அருகே மேலமடை கிராமத்தில் 51ஆவது கிருஷ்ணஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணன் வேடத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நடனமாடி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலமடை கிராமத்தில் 51 ஆவது ஆண்டு பொன்விழாவை கடந்து கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு கண்ணபிரான் காட்சியளித்தார்.

இதன்பிறகு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து கண்ணணாக தேர்வு செய்யப்பட்ட மதன்குமாரை கோவிலில் இருந்து அனைத்து பக்தர்களும் புடைசூழ வானவேடிக்கையுடன் கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று கண்ணபிரான் ஆலயம் வந்து தரிசனம் செய்தனர்.

பல குழந்தைகள் கிருஷ்ணன் வேடத்திலும் பெண்கள் ஒன்றாக இணைந்து நடனமாடியும் விழாவை சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மதன்குமார் என்பவர் கண்ணனாக உறியடித்தார்.
கண்ணன் அழைப்பு உறியடி நடந்த பின்பு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. பின்னர் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மேலமடை கிராம விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


 
			 
			 
			 
			 
			