தனியார் பேருந்துக்கு நிகராக குறைந்த கட்டணத்தில் அரசு நவீன குளிர்சாதன பேருந்து துவக்கம்
 
					தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று காஞ்சிபுரம் – சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார்.

புதிய குளிர்சாதன பேருந்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இருக்கையின் அருகில் Single Control Unit (SCU) பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏதாவது குறைபாடு இருப்பின் சுவிட்ச்சை அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும் Bus Driver Control (BDC) பயணிகளிடம் பெறப்படும் குறைபாடு உடனே ஓட்டுனரால் தகவல் பெறப்படும் அவர் தன்னிடம் உள்ள மைக் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

பேருந்து உட்புறம் ஸ்டாப்பிங் தெரிவிக்கும் LED Board பொருத்தப்பட்டுள்ளது. பேருந்தின் உள்ளே இரண்டு கேமரா பொருத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் முன்புறம் உள்ள Display மூலம் பேருந்து பின்புறம் எடுக்கும்போது கேமரா மூலம் கண்டறிந்து பாதுகாப்பாக இயக்கவும், படிக்கட்டில் சென்ஸார் பொருத்தப்பட்டு, பயணி படிக்கட்டில் நின்றால் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கபடும்.
பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய அரசு குளிர்சாதன பேருந்தை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார்.

இப்பேருந்து நான்கு முறை காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கும், அதேபோல் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு நான்கு முறை பயணிகள் பயணிக்கும் வண்ணம் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தனியார் பேருந்துக்கு நிகராக அரசு புதிய குளிசாதான பேருந்தில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து, குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணம் செய்ய பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
இக்குளிர்சாதன பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து காலை 5.20 மணிக்கும், 9.20 மணிக்கும், மதியம் 1.20 மற்றும் மாலை 5.20 மணிக்கும் ஆகிய நேரங்களில் அதிநவீன அரசு குளிர்சாதன பேருந்து புறப்படும் எனவும், அதேபோல் சென்னையிலிருந்து காலை 7.15 மணிக்கும், 11.15 மணிக்கும், மதியம் 3.30 மணிக்கும் மற்றும் இரவு 7.30 மணிக்கும் ஆகிய நேரங்களில் அதிநவீன அரசு குளிர்சாதன பேருந்து புறப்படவுள்ளது. இக்குளிர்சாதன பேருந்தில் 54 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து ஒருவழி பயணம் தூரம் 75 கி/மீ ஆகவும், இந்த பயணம் தூரத்தை 1 மணி 40 நிமிடங்களுக்குள் சென்றடையும் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			