சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஒவ்வொரு மாதமும் ஆய்வு கூட்டத்தை நடத்துவார். அந்த கூட்டத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து விவாதிக்கப்படும்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 மாநிலங்களுக்கு ஒரு முறை சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெறும்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை எவ்வாறு உள்ளது?, குற்ற வழக்குகள் எத்தனை உள்ளது?” என்பது குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், “காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், அந்த அறிவிப்புகளில் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது” என்பன குறித்தும், இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *