காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் SIR திருத்தம் குறித்து பாஜகவின் பயிலரங்கம்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் SIR திருத்தம் குறித்து பாஜகவின் பி எல் ஏ 2 வின் பயிலரங்கம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் டாக்டர் ஆ செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதிகள் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் SIR திருத்தம் குறித்து பாஜகவின் பி எல் எ 2வின் பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் டாக்டர் ஆ செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்சியாளர் ஆக மாநில செயற்குழு உறுப்பினரும் தாம்பரம் சட்டமன்ற அமைப்பாளர்மான வேதா சுப்ரமணியன் கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகளை வழங்கினார்.

இதில் சட்டமன்ற இணை அமைப்பாளர் ஓம் சக்தி பெருமாள், சட்டமன்ற பொறுப்பாளர் ஜம்போடை சங்கர், மண்டல தலைவர்கள் தனலட்சுமி, கோகிலா, மாவட்ட பொதுச்செயலாளர் பத்மநாபன் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

