காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தீவிர வாக்காளர் பட்டியல் சீராக கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் முத்து செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் (காங்கிரஸ்) குமரகுருநாதன், விசிக மாவட்ட செயலாளர் எழிலரசு மதியாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், மாநகர பொருளாளர் சுதா என்கின்ற சுப்பராயன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் ராகவன், நகரத் தலைவர் நாதன், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராதாகிருஷ்ணன் மண்டல குழு தலைவர் மோகன், மாநகராட்சி – மாமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பகுதி செயலாளர் தசரதன் நன்றிகளை தெரிவித்தார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *