இந்திரா காந்தி அவர்களின் 108வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை

இந்திரா காந்தி அவர்களின் 108வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை

தூத்துக்குடி: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 108வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று இந்தியா முழுவதும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 108வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தி அவர்களின் திரு முழு உருவசிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் எடின்டா, மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி, ஊடக பிரிவு தெற்கு மாவட்ட தலைவர் ஆசிர் செல்வன், மீனவர் அணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல் பர்ணாந்து, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி பிரீத்தி வினேத், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், எஸ்சி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பிரபாகரன், மனித உரிமை துறை மாநகர் மாவட்ட தலைவர் ஜெயராஜ், மேற்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, நகர மீனவர் அணி தலைவர் சிமியான், மாவட்டத் துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், நெப்போலியன், நவரோஜ், ரூபன் வேதசிங், அருணாச்சலம், அருள் வளன், முத்துராஜ், இருதயராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், குமாரமுருகேசன், ஜூட்சன், சிவன் யாதவ், சசி, காமாட்சி தனபால், ஜான்சன், கதிர்வேல், ஐஎன்டி யூசி தலைவர் சுப்பிரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், வார்டு தலைவர்கள் வேல்குமார், தாமஸ், சித்திரை பால்ராஜ், முத்துவேல், சுரேஷ், சுடலை, வெள்ளையன், மகாலிங்கம், ஜேம்ஸ், மாரியப்பன், வாசி ராஜன், ரத்தன், விஜயா, ஜெயமணி சுரேஷ், முருகேசன், ஜூடு, அலெக்ஸ், சுரேஷ், வில்சன், சரவணன், ஜோ பெர்னான்டோ, உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *