காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு நினைவு தினத்தை ஒட்டி குருகுல மாணவிகளுக்கு அன்னதானம்
காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவள்ளுவர் குருகுல மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு குளத்தில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் முன்னாள் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், காஞ்சிபுரம் நகர மன்ற தலைவருமான அமரர் எஸ் எஸ் திருநாவுக்கரசு அவர்களின் 21வது ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி அவரது மனைவி மைதிலி திருநாவுக்கரசு தலைமையில் சின்ன காஞ்சிபுரம் உள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் உள்ள மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் நகர மன்ற தலைவரும், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளருமான சேகர், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், கபாலி, டிரான்ஸ்போர்ட் மனோகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





