காஞ்சிபுரம் SSKV பள்ளி வளாகத்தில் கம்பன் கழகம் சார்பில் “காஞ்சி தமிழோசை” இதழ் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் SSKV பள்ளி வளாகத்தில் கம்பன் கழகம் சார்பில் “காஞ்சி தமிழோசை” இதழ் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள எஸ் எஸ் கே வி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் காஞ்சிபுரம் கம்பன் கழகம் சார்பில் காஞ்சி தமிழோசை இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பி. சுந்தரி அவர்களின் இறை வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர் டாக்டர் சி கே ராமன் வரவேற்புரை ஆற்றினார். திருமதி பானுமதி ரமேஷ் அறிமுக உரையாற்றினார். திருப்பூர் கிருஷ்ணன் இதழ் வெளியிட்டார். இதனை தொடர்ந்து தலைமை உரையாற்றினார்.

முதல் பிரதியினை கவிஞர் கலை மாமணி, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முத்து ராமமூர்த்தி, டி.ஆர். சுப்பிரமணியன், குகரமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கம்பன் கழகத்தின் செயலாளர் பெருமாள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியினை ரேணுகா தொகுத்து வழங்கினார். இதில் ஏராளமான ஆன்மீக ஆண்டுகளும் மாணவ மாணவர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டனர்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *