காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் காஞ்சிபுரம் மாவட்டம் நடத்தும் தமிழிசை விழா 2025 கோலாகலமாக நடைபெற்றது.
மண்டல கலை பண்பாட்டு மைய காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடி துவக்கி வைத்தனர்.
இதில் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் உமாசங்கர் வாழ்த்துரை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதாளர் கலைமாமணி சங்கீத கலாநிதி வலையபட்டி ஏ ஆர் சுப்பிரமணியன் தவில். திருக்கோவிலூர் பாலாஜி குழுவினர் நாதஸ்வரம் கச்சேரி மற்றும் ஹரிணி ஜீவிதா “பிரபந்தமும் பரதமும்” என்கின்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் ஆன்மீக ஆன்றோர்கள் சான்றோர்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ரமணி நன்றிகளை தெரிவித்தார்.



