காஞ்சிபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

இரா. செல்லசாமி, பா.ஜ.க மருத்துவ பிரிவு, மாநில செயலாளர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க நெசவாளர் பிரிவு &
மார்னிங் ஸ்டார் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நெசவாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இந்த முகமானது கருக்குபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 9 முதல் 4 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் 250 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்துகொண்டு பலனடைந்தார்கள்.

இதில் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் திரு அண்ணாதுரை அவர்கள், மருத்துவப் பிரிவு மாநில தலைவர் டாக்டர் திரு எஸ் டி பிரேம்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டத் தலைவர் திரு.தாமரை, ஜெகதீசன் தலைமையில், நெசவாளர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு.வஜ்ஜிரவேல், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் திரு மணி, மாவட்ட நெசவாளர் பிரிவு துணைத் தலைவர் திரு பெருமாள், மாவட்ட நெசவாளர் பிரிவு துணைத் தலைவர் திரு புவனேஸ்வரன், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் திரு ஜெயந்தி, முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக மார்னிங் அறக்கட்டளை கௌரவ தலைவர் திரு கணேசன், மாவட்ட துணைத் தலைவர் திரு ஓம் சக்தி பெருமாள், ஆன்மீக ஒன்றிய தலைவர் திரு வாசுதேவன், ஊடகப்பிரிவு தலைவர் திரு மணிகண்டன் மற்றும் திரு பரமசிவம், திரு பாபு, வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் திரு பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு பிரேமா, வடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரு சுவாமிநாதன், திரு அன்பு வெங்கடாஜலம், திரு சுரேஷ், திரு பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


