காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள மாவட்ட தலைவர்களை 15 நாட்களுக்குள் தேர்வு

காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள மாவட்ட தலைவர்களை 15 நாட்களுக்குள் தேர்வு

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள மாவட்ட தலைவர்களை 15 நாட்களுக்குள் தேர்வு செய்து அறிவிக்கப்படும் – காங்கிரஸ் பொறுப்பாளர் ராகுல் ஷர்மா அறிவிப்பு.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பார்வையாளர்களால் இயக்கப்படும் ‘சங்கதன் ஸ்ரீஜன் அபியான்’ என்பது காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை அடையாளம் காணும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இது கோஷ்டிவாதத்தை நிவர்த்தி செய்வதையும், 2014 முதல் தேர்தல் பின்னடைவுகளை பகுப்பாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான ராகுல் ஷர்மா இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்கும் பணியில் ஆய்வு செய்து அதற்கான பட்டியலை தலைமை அலுவலகம் டெல்லிக்கு அனுப்பம்படி ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே அரியானா மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு செய்யும் பணிக்கான தமிழகம் வருகை தந்த நிலையில், முதல் மாவட்டமாக காஞ்சிபுரம் பகுதிக்கு வருகை தந்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் 77 மாவட்ட தலைவர்களில் 15 மாவட்ட தலைவர்கள் பதவி காலியாக இருப்பதால் காஞ்சிபுரம் காரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் ஷர்மா கூறுகையில், “தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மாவட்ட தலைவர்கள் தேர்தெடுக்கும் பணியை நடைபெற்று வரும் வகையில் இன்னும் 15 நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்,

மேலும், “இந்த மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்கும் பணியில் எந்த ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் அல்லது மாநில தலைவர்கள் யாருடைய தலையீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் சென்று கட்சிக்காக உழைப்பவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிவி மதியழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் லியாகத் ஷெரிப், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மாநகர தலைவர் நாதன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் VLC ரவி, சாதிக் பாஷா, இளைஞர் அணி யோகி, மகேந்திரன், தென்னேரி சுகுமார் மற்றும் மாநகர பகுதி தலைவர் பார்த்தசாரதி, ஓ பிசி அணி பாலமுருகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *