தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்க கட்சியினரை தனித்தனியாக சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்சி விஜய் தரம் சிங் தகவல்.

தமிழகத்தில் புதிய மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்சி விஜய் தரம் சிங்கை பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.

அதன்படி பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வருகை தந்த அவருக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக வருகை தந்த முன்னாள் எம்எல்சி விஜய் தரம் சிங் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தின் போது தனிநபர்கள் மற்றும் ஏரியா வாரியாக குழுவாக தங்களது மாவட்டத்திற்கு தேவையான தலைவர்கள் யார் வேண்டும், யார் வேண்டாம், என்பது குறித்து நேர்காணலின் போது தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

“இதில் பெறப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும், இதில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரை விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறிந்து அதனை தலைமைக்கு தெரியப்படுத்தி டெல்லியில் இருந்து உரிய உத்தரவு பெறப்பட்டு மாவட்ட தலைவர் அறிவிக்கப்படுவார்கள்.”

“இந்தியா முழுவதும் இந்த செயல்முறை துவங்கிவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் உட்பட மொத்தம் 75% மாவட்டங்களில் இந்தப் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள எம் பி, எம் எல் ஏ எல்லோரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.”

“எல்லா தலைவர்களையும் அடிமட்ட தொண்டர்களையும் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர்கள் சொல்லும் விஷயங்களை ரகசியம் காக்கப்படும் எனவும், அதனை வைத்து தூத்துக்குடி மத்திய வடக்கு தெற்கு மாவட்ட தலைவர்கள் வெளிப்படையாக நியமிக்கப்படுவார்கள்.”

“இங்கு ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களை மேல் இடத்திற்கு எடுத்துச் சென்று சொல்வோம் எனவும் அதன் பின்னர் மேலிடம் மாவட்ட தலைவரை அறிவிப்பார்கள்” விஜய் தரம் சிங் தெரிவித்தார்.

மேலும், எஸ் ஐ ஆர் குறித்து கேட்ட கேள்விக்கு, எஸ் ஐ ஆர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் எனவும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்ய தூத்துக்குடியில் நேர்காணல் நடத்திய கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் எம்எல்சி விஜய் தரம் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், ஏபிசிவி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, பெருமாள்சாமி PCC, சந்திரபோஸ் PCC, ஐசன் சில்வா PCC, T.சேகர், செந்தூர்பாண்டி, எஸ்.பி.ராஜன், ஜான் சாமுவேல், மாமன்ற உறுப்பினர்கள் எடிட்டா, கற்பக கனி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரீத்தி வினோத் வர்த்தக காங்கிரஸின் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரியா ஆல்வின், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன் மற்றும் மண்டல தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துணை அமைப்பு தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் வார்டு தலைவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *