காஞ்சிபுரம் காவலன் கேட் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம் காவலன் கேட் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திரு கோயில் ஸ்ரீவேகவதீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் நவகிரகம் மற்றும் திருக்கோயில் கோபுர விமானங்கள் புனரமைப்பு பணி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மூன்று நாட்களும் திருமுறை பாராயணம், புதிய புயல் நடன குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சிகள், நாட்டிய இசை கச்சேரிகள் என நடைபெற்றது.

நான்கு காலமும் சிறப்பான யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற பின் காலை 9 மணிக்கு மகாபூர்ணஹதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
திருக்கோயிலை வலம் வந்து சிவாச்சாரியார்களால் விமானம், மூலவர் சக்தி விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியர் நவகிரக வேகதீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராள ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக திருவிழாவினை அறம் வளத்தீஸ்வரர் கோயில் சின்ன தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைத்தனர்.



