காமராஜரை இழிவுபடுத்துவதா?: தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய மை இந்தியா youtube சேனல் நடத்தி வரும் முக்தார் அகமதுவை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின முக்தார் மீது வன்முறையை தூண்டும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் பேசியதாவது: “பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி மை இந்தியா youtube சேனல் நடத்தி வரும் முக்தார் அகமது, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு மட்டுமல்லாமல், பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.”
“இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக முக்தார் அகமது மீது குண்டர் சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது.”

“இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு முக்தார் முகமது மீது வழக்கு பதிவு செய்து துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும்.”
“பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி 9 ஆண்டு காலம் சிறையில் இருந்து அதற்குப் பின்பு மக்களின் பெரும் ஆதரவை பெற்று 9 ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக ஊழலற்ற, நேர்மையான, பொற்கால ஆட்சியை தந்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.”
“அவரது ஆட்சியில் கக்கன், அப்துல்மஜீத், பரமேஸ்வரன், பக்தவச்சலம், சி. சுப்பிரமணியன், மாணிக்கவேலு, லூர்தம்மாள் சைமன், ராமையா, ஆர் வெங்கட்ராமன், ஜோதி வெங்கடாசலம் போன்றவர்களை தனது அமைச்சரவையில் சேர்த்து தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற, எளிமையான ஒரு பொற்கால ஆட்சியை தந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.”
“பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்து 50 ஆண்டு காலம் ஆன பின்பு தற்போது தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் திட்டமிட்டு வேண்டுமென்றே காமராஜரை விமர்சனம் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அரசுக்கு எதிராக வர வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.”

“காமராஜர் அவர்கள் சாதி, மதத்தை கடந்து அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். அப்படிப்பட்ட தலைவரை தரக்குறைவாக பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.”

“தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்த காமராஜரை இப்படி பேசலாம், அதை வேடிக்கை பார்க்க தான் செய்வார்கள் என்ற நிலை இருந்தால் காமராஜருக்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களையும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடும். இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.”
“எனவே இவனை போன்றவர்கள் மீது உடனடியாக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் தான் எதிர்காலத்தில் யாரும் தலைவர்களை விமர்சிக்க மாட்டார்கள்.”
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் சி. எஸ். முரளிதரன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர்கள் ராஜன், செந்தூர் பாண்டி, சேகர்,ஐசன் சில்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் APCV சண்முகம் சிறப்புரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐ. என். டி. யு. சி தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், எஸ் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, முன்னாள் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்து விஜயா, மாவட்ட நிர்வாகிகள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், கோபால், தனபால் ராஜ் காமாட்சி தனபால் , அந்தோணி சாமி, சித்திரை பால்ராஜ், தனுஷ், மாரியப்பன், மகாலிங்கம், ரெனிஷ் பாபு, ஜோசப் அரவிந்த், கிருஷ்ணன், சரஸ்வதி நாதன் ,Intuc ராஜா, ஐ என் டி யு சி மாநில அமைப்புச் செயலாளர் சுடலை, சேர்மப்பாண்டி, மார்க்கஸ், அருணாசலம், முனியசாமி, சாந்தி மேரி ,குமார முருகேசன், வாசி ராஜன், கதிர்வேல், அந்தோணி ஜெயராஜ், எபநேசன், ராமசாமி, சிவன் யாதவ், காமராஜ் ,அழகு, ரத்தன், அன்னத்தாசி, அன்னமரியாள், பார்வதி, சத்ய ராணி, ஜெயமணி சுரேஷ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், மைக்கில் பிரபாகர், ராஜரத்தினம், சுப்பிரமணி, கிருஷ்ணன், முத்துராஜ், கமலேசன், நெப்போலியன், வேல் குமார், தாமஸ், குமாரசாமி, INTUC சுப்பிரமணியன், மாரியப்பன், பிராங்கிளின், மகாலிங்கம் மாரிமுத்து, ஜூட்சன், ஜேம்ஸ், ஜெகன் ஜோஸ், சக்திவேல், முருகன், ஆறுமுகம், பெண்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


