தூத்துக்குடியில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மரியாதை
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவினர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுமுகம் சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

