ராமநாதபுரத்தில் தவெக பயிற்சி பட்டறை மற்றும் பூத் கமிட்டி கூட்டம்
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் முதல்முறையாக பயிற்சி பட்டறை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் நகர் தலைவர் கே.கே.ராஜ்குமார் தலைமையில் ராமநாதபுரம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா முன்னிலை வகித்தார். த.வெ. க. நிர்வாகிகள் அனைவரும் எவ்வாறு படிவங்களை பூர்த்தி செய்வது, வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர் முறைப்படி மனு கொடுத்தவர்கள் இடம்பெற்றுள்ளனரா? இதில் முறைப்படி மனு செய்த வாக்காளர்கள் ஏன் விடுபட்டுள்ளனர்? என்பதை அறிந்து நிர்வாகிகள் உடனே சென்று கலந்து ஆலோசித்து அவர்களை வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட த வெ க ., பூத் கமிட்டி மற்றும் பயிற்சி பட்டறை கூட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மருத்துவர் அணி அப்துல் லத்தீப், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் தினேஷ் குமார், மாணவரணி அமைப்பாளர் தமீம், இளைஞரணி ரஞ்சன் மற்றும் பூத் கமிட்டி, பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

