சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்

அன்னை சோனியா காந்தி அவர்களின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தபசு மண்டபம் அருகில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ராஜன், செந்தூர்பாண்டி, சேகர், ஐசன் சில்வா, ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், எஸ் சி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பிரபாகரன், விவசாயப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்தோபர், மாவட்டத் துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், மார்க்கஸ், அருணாசலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், குமாரமுருகேசன், அந்தோணி ஜெயராஜ், வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, வார்டு தலைவர்கள் ரத்தன், வாசி ராஜன், பெனடிக், தனுஷ், வெள்ளையன், சுடலை, சரவணன், சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


