நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் – முதலமைச்சர் திறப்பு!
ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராமநாதபுரம் பாத்திமா நகரில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில் நகர் மன்ற தலைவர் ஆர்.கே. கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

