தூத்துக்குடியில் களைகட்டும் கிறிஸ்மஸ் ‘Stars’ விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு வகையான நட்சத்திரங்கள், குடில் அலங்காரத்திற்கு தேவையான அலங்காரப் பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்து பிறப்பை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இயேசு கிறிஸ்து பிறப்பை மகிழ்வுடன் அறிவிக்கும் வகையில் இல்லங்கள், அலுவலகங்கள், தேவாலயங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.
இயேசு கிறிஸ்து மாட்டு கொட்டகையில் பிறப்பது போன்று செயற்கை மாட்டுத் தொழுவத்தால் குடில் அமைத்து அலங்கரிப்பார்கள்.

அதில் இயேசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் வகையில், சிறு பொம்மைகள் வைத்து அழகுபடுத்துவர்.
மேலும், வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் அமைப்பது, வாசலில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பேப்பரால் செய்யப்பட்ட நட்சத்திரங்களைத் தொங்க விடுவது போன்றவற்றை மேற்கொள்வர்.
இந்த மாதத்தில் ஒவ்வொரு தேவாலயங்களில் இருந்தும், கிறிஸ்துமஸ் தாத்தாவாக உடையணிந்தவர்கள் வீடுகளுக்கு வருகை புரிந்து, குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்வர்.
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் பகுதியில் கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த பொருட்களை விற்பனை களைகட்டியுள்ளது.

கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்மஸ் நட்சத்திரங்கள் தொங்க விடுவதற்காக பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்காக பல்வேறு வண்ணங்களில் உள்ள நட்சத்திரங்கள், வண்ண விளக்குகள், வீட்டில் செயற்கை மாட்டுத் தொழுவம் அமைக்க வண்ண வண்ண மலர்கள், விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அலங்கார பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
முக்கிய வீதிகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.


