அமலாக்க துறையை கண்டித்து தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

அமலாக்க துறையை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி விலக கோரியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் தவறு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியாகாந்தி மீதும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதும் பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்து டெல்லி நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி. எனவே அமலாக்க துறையை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி விலக கோரியும், நாடு தழுவிய போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ. பி. சி. வி. சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர்பாண்டி, ஐசன் சில்வா, INTUC தொழிற்சங்க மாநில அமைப்பு செயலாளர் ராஜ், INTUC மாநில செயலாளர் சுடலை, மாநகர் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பிரீத்தி, சிறுபான்மை பிரிவு மாநகர மாவட்ட தலைவர் மைதீன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீனவரணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல் பர்ணாந்து, எஸ்சி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பிரபாகரன், கலை இலக்கியப் பிரிவு மாநகர மாவட்ட தலைவர் செல்வராஜ் , சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஆரோக்கியம், மீனவரணி நகர தலைவர் சிமியான், INTUC சுப்பிரமணி, INTUC ராஜா, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலாதேவி, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெத்துராஜ், மாவட்ட நிர்வாகிகள் குமாரமுருகேசன், நாராயணசாமி, சித்திரை பால்ராஜ், முத்துராஜ், ரெனிஸ் பாபு, கமலேசன், சரஸ்வதி நாதன், சின்ன காளை, சசி பர்ணாந்து, கிருஷ்ணன், ராஜன், அழகு, முனிய தங்க நாடார், தனுஷ், லட்சுமணன், முனியசாமி ,அந்தோணி ஜெயராஜ், பிளேசி, சரவணன், வில்சன், ரத்தன், வேல்முருகன், சாமிக்கண்ணு, கணேசன், மாரியப்பன், வெள்ளையன், மகாலிங்கம், ஜேம்ஸ், ஜெகன், மகாராஜன், அன்ன மரியாள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தேசியத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, வார்டு தலைவர்கள் மகேந்திரன், சீனிவாச ஆசாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

