ராமநாதபுரம் ஸ்ரீ பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி மகோத்சவ விழா இன்று காலை அபிஷேக ஆராதனைகள் தீபாராதனை நடைபெற்று ஸ்ரீ பால ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர், பின்பு அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

