தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சை திரும்பிய வீரர்கள்

விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சை திரும்பிய வீரர்களை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
63 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்ற போட்டியில், ஹரியானா சண்டிகர் ஆந்திரா தமிழ்நாடு பஞ்சாப் உள்பட 23 மாநிலங்களைச் சேர்ந்த 120 அணிகள் கலந்து கொண்டன.

இதில் தமிழகத்தின் சார்பில் எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.
தஞ்சை வந்த வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்றனர்.

