காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சார்பில் 33 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசி

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சார்பில் 33 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசி.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய மாடு வீட்டில் அமைந்துள்ள கொல்லா சத்திரம் வளாகத்தில் டீ சீதாராம பஜனை மண்டலியின் 33வது ஆண்டு கல்யாண மகோற்சவம் சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் நடைபெற்றது.

இதில் சங்கர மடப்பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு அருள் ஆசி வழங்கினார். இதில் சிறப்பு மாங்கல்யதாரணம் சமர்ப்பித்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது .
இதில் கடையநல்லூர் ஸ்ரீ ராஜகோபால பாகவதர் குழுவினர் சிறப்பு கச்சேரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சீதாராம பஜனை மண்டலி குழுவினர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


