தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனித் திருமஞ்சனம் ஸ்ரீ நடராஜருக்கு உரிய அற்புதமான நாள், சிவன் கோவிலில் அனைத்து தலங்களிலும் ஆனி திருமஞ்சனம் முக்கியமான வைபவமாக கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயத்தில் தனி சன்னதியில்
வீற்றிருந்து அருள் பாலிக்கும் நடராஜப் பெருமானுக்கு விபூதி, திரவியப்பொடி, மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர் மற்றும் சந்தனம் ஆகிய அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

