காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில் 48 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில் 48 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா – 108 சங்காபிஷேகம்

48 நாட்கள் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில், மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெற்ற 48 நாள் மண்டலாபிஷேகத்தின் பூர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினசரி பூஜைகள்

கடந்த ஜூன் 5ஆம் தேதி செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மண்டலாபிஷேக பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம்

48 நாட்கள் மண்டலாபிஷேகம் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மூலவர் செவ்வந்தீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திரளான பக்ர்கள் சுவாமி தரிசனம்

இந்த சிறப்பு விழாவில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செவ்வந்தீஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றனர்.

விழா ஏற்பாடுகள்

விழாவிற்கான ஏற்பாடுகளை கெம்பு செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த லதா சிவராஜன் வம்சத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா – 108 சங்காபிஷேகம்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *