ராமநாதபுரத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
ராமநாதபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஆணைகிணங்க புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மாற்றுக் கட்சி மற்றும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அதிமுக நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, “இளைஞர்களுடைய வலுவான சக்தியாக மிகப்பெறிய தீப்பொறியாக விளங்கக்கூடிய மிகப் பெரிய சக்தியாக விளங்கும் என்றும் நகர் கழகம் மற்றும் கிராமப்புற மக்களை ஒறுங்கிணைக்கும் சக்தி இளைஞர்களிடம் தான் உள்ளது” என்றார்.
மேலும் மண்டபம் ஒன்றியத்தில் அதிகமான உறுப்பினர்கள் பல்வேறு கட்சியில் உள்ள உறுப்பினர்கள் இணைந்தனர்.

