தூத்துக்குடியில் பொங்கல் விழா மற்றும் பிரியங்கா காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் ராகுல் பொங்கல் விழா மற்றும் இளைய இந்திரா பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போல் பேட்டை வடக்கு பகுதியில் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் இல்லம் முன்பு நடைபெற்ற விழாவில் ராகுல் சமத்துவ பொங்கல் இட்டனர். பின்னர் காங்கிரஸ் கட்சியினர் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கல் பானை, மற்றும் வேஷ்டி, சேலை, மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.


இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன், செந்தூர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட தலைவர் A.T.S அருள், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், நகர மீனவர் அணி தலைவர் சிமியான், எஸ் .சி .பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மகிலா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி முத்து விஜயா, வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, அமைப்பு சாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், மாவட்ட நிர்வாகிகள் கோபால், குமார முருகேசன், அந்தோணி ஜெயராஜ், தனுஷ், மகாலிங்கம், வாசி ராஜன், ரத்தன் கதிர்வேல், தாமஸ், பொன்ராஜ், ஜெயராஜ், ராஜா, சரஸ்வதி நாதன், வெள்ளையன், சசி பர்ணாந்து, அகஸ்டின் ஜெபராஜ், அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.



