காஞ்சிபுரத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா

காஞ்சிபுரத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா

காஞ்சிபுரத்தில் இந்து குடும்பங்களின் சங்கமம் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சாலை தெரு பகுதி வாழ் மக்களின் சார்பில் முப்பெரும் விழா மேற்கு ராஜ வீதியில் உள்ள ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்து குடும்பங்களின் சங்கமம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

இதில் காஞ்சி காமாட்சி சங்கரமடம் வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளரும் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின்மாநில இணை செயலாளருமான காஞ்சிபுர ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

குளக்கரை மாரியம்மன் கோவில் தலைவர் குமார் என்கின்ற பக்தவச்சலம் தலைமை உரை ஆற்றினார். சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் தேசிய துணை தலைவர் துரைசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் காமாட்சி அம்மன் ஆலய தானிகர் நடராஜ சாஸ்திரி, குமரகோட்டை முருகன், ஆலய அர்ச்சகர் காமேஸ்வர குருக்கள், தலைமை ஆசிரியர் சதாசிவம், சோழன் குரு கல்வி அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவி ஜெயராம், பாலாஜி, சுரேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி, யோகா உள்ளிட்ட ஆனந்தன் காஞ்சி பல்லவன் அரிமா சங்க நிர்வாகி சீனிவாசன், பழனி ஆண்டவர் கோவில் தலைவர் பாபு, சபரிமலை ஐயப்பா சேவா சமாஜ மாவட்ட தலைவர் சரவணன், அம்மா தேநீர் கடை நந்தகுமார், தனலட்சுமி, உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆன்மீக ஆன்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் விஸ்வ விஸ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவானந்தம் நன்றிகளை தெரிவித்தார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *