காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக S.A. அருள்ராஜ் நியமனம்: காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக S.A. அருள்ராஜ் நியமனம்: காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவரும் காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளருமான அருள்ராஜ் அவர்களை நியமனம் செய்து ஆணையை வழங்கினார்.

S.A.அருள்ராஜ் பல ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியயக்கத்திற்கு அயராது பாடுபட்டவரும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பல்வேறு அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் தொடக்கத் தலைவராக செயல்பட்டு தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பேரியக்கத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும் என்பது இந்த பதவி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வழங்கியிருப்பது ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில தலைவருக்கு நன்றிகளை தெரிவித்து மாவட்ட தலைவர் அருள்ராஜ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் பெரிய தொண்டர்கள் கட்சி வளர்ச்சி பணி குறித்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட தலைவர் SA அருள்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *