காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநில தலைவருடன் மரியாதை நிமித்த சந்திப்பு
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ் ஏ அருள்ராஜ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை மற்றும் மலர் கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ள ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ. அருள்ராஜ், சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடைகள் மற்றும் மலர் கொத்துகள் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார்.
இதில் காஞ்சிபுரம் மாநகரத் தலைவர் நாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் நிக்கோலஸ், புஷ்பராஜ், எருமையூர் ஏழுமலை, ஆதிகேசவன், கோபி, திருமலை, கௌதம், முருகன் என்கின்ற சாந்தகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

