2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பணியில் ஈடுபடுவோம்: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உறுதி!

2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பணியில் ஈடுபடுவோம்: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உறுதி!

2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பணியில் ஈடுபடுவோம், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் S.A. அருள்ராஜ் உறுதி.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரிந்துரையில் நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ். ஏ. அருள் ராஜ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பணியாற்றி வெற்றியினை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காஞ்சி ஜி.வி. மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயப்பன், மாநில இளைஞரணி அமைப்பாளர் அனீஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார், காஞ்சிபுரம் மாநகர தலைவர் நாதன், இளைஞர் அணி யோகி லோகநாதன், பிரபு, தென்னேரி சுகுமார், வட்டாரத் தலைவர் ஆசிரியர் நிக்கோலஸ் புஷ்பராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுமிதாபாய், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட வட்டார நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *