ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் பால்குடம் அபிஷேக விழா

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் பால்குடம் அபிஷேக விழா

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு பால்குடம் அபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் விஸ்வரூப தரிசன சபா சார்பில் 15 ஆம் ஆண்டு பால்குடம் அபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் ரயில்வே சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் பலம் வந்து காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சபாவின் தலைவர் குமார், செயலாளர் பிரபு, பொருளாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோகுல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் கோகுல கிருஷ்ணன் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினார். இதில் உமாசங்கர், கோபிநாத், பாலாஜி, செந்தில்குமார், முருகன், இளையராஜா, நிர்மல் குமார், பச்சையப்பன் ஆகியோர் சபா நிர்வாகிகளுடன் இணைந்து விழாவினை சிறப்பாக செய்திருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *