ஓரிக்கை ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை உற்சவம்

காஞ்சிபுரம் ஓரிக்கை ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை உற்சவத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி ஊஞ்சல் சேவை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஊரணி பொங்கல் வைத்து சுமங்கலி பூஜையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஓரிக்கை மணிமண்டபம் நிர்வாகி பொறியாளர் மணி மாமா ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி வழிபாடு செய்தனர். கலந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவில் மணிமண்டபம் நிர்வாகிகள் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அப்பகுதி கிராம மக்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


