காஞ்சிபுரம் மாவட்டத்தில் Hyundai Center for Education Excellence திறப்பு
ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை கிராமப்புற கல்விக்கான உள்கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் Hyundai Center for Education Excellence திறந்துள்ளது.
• மாண்புமிகு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
• புதிய கூடுதல் பள்ளிக் கட்டிடம், கற்றல் தரத்தைக் உயர்த்த உதவும் 16 வகுப்பறைகள் மற்றும் இரண்டு அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.
• பாதுகாப்பான, நவீன மற்றும் உள்ளடக்கிய கற்றல் தளமாக, இந்த கட்டிடம் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் வருகைப் பதிவை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• ஆண்டுதோறும் சுமார் 1,000 மாணவர்கள் பயன்பெறுவர்.
• பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 5.22 கோடி முதலீடு.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF), காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.22 கோடி செலவில் Hyundai Center for Education Excellence அமைத்து, தரமான கல்வி வழங்குவதில் தனக்குள்ள அக்கறையை மீள்உறுதி செய்துள்ளது.
இந்த புதிய வகுப்பறைக் கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் திறந்துவைத்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை அறங்காவலர்கள் திரு.கோபால கிருஷ்ணன் C S, திரு. சரவணன் T, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. செல்வப்பெருந்தகை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் Dr.A. நளினி, தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.T E சசிகுமார், தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சந்திரசேகர், பிற பிரமுகர்கள் மற்றும் பள்ளி பிரதிநிதிகள் முன்னிலையில் பள்ளி நிர்வாகக் குழு மற்றும் தண்டலம் கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
15,750 சதுர அடி பரப்பளவில், 16 வகுப்பறைகள் மற்றும் முழுமையான வசதிகள் அடங்கிய இரண்டு நவீன அறிவியல் ஆய்வகங்களுடன், இக்கட்டிடம் அனுபவரீதியிலான கல்விக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த உள்கட்டமைப்பு, வகுப்பறை ஈடுபாடு, செய்முறை விளக்க அறிவியல் கல்வியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான, ஊக்கமூட்டும் கற்றல் சூழலையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. ஆர்வம், அறிவியல் சிந்தனை மற்றும் மேல்படிப்பிற்கான உத்வேகம் ஆகியவற்றை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் இந்த தரமான கற்றல் தளத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1,000 மாணவர்கள் பயனடைவர்.
துவக்க விழாவில் உரையாற்றிய HMIF அறங்காவலர் திரு. கோபால கிருஷ்ணன் C S அவர்கள், “கல்வி என்பது முன்னேற்றத்திற்கான ஒரு மூலக்கல். தண்டலம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.”
“இந்த புதிய கட்டிடம், அனைவரையும் உள்ளடக்கிய, சமூக முன்னேற்றம் மூலம் பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்வதில் ஹூண்டாயின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.”
“இன்று, திறன்மிகு இளம் தலைமுறையை உருவாக்குவது, நாளை வலுவான, மீள்தன்மை கொண்ட சமூகங்களைக் கட்டமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியுடனும், ஹூண்டாய், சமத்துவம், முற்போக்கு மற்றும் நிலைத்தன்மை ஆகியன மிகுந்த சமூக உருவாக்கத்தில் அதன் அக்கறையை மீண்டும் வலியுறுத்துகிறது,” என்றார்.
சமூகம் மற்றும் நிலைப்புத்தன்மையில் வேரூன்றியுள்ள அக்கறை தண்டலம் கிராம பஞ்சாயத்து மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவின் வேண்டுகோள்களைத் தொடர்ந்து இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இது, ஒருங்கிணைந்த, தேவை அடிப்படையிலான சமூக மேம்பாட்டில் HMIFன் நம்பிக்கையை பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கல்வி உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், HMIF நீண்டகால, உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது. மேலும், ஒவ்வொரு குழந்தையின் வெற்றிக்கான வாய்ப்பை வழங்கும் கற்றல் சூழல்களை உருவாக்குவதிலும் பங்களிக்கிறது.
‘Hyundai Center for Education Excellence’, வேகமாக வளர்ந்து வரும் உலகில், எதிர்கால தலைமுறையினர், வெற்றிபெறத் தேவையான திறன்கள், நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. கல்வி மூலம் நேர்மறையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான HMIFன் தொலைநோக்குப் பார்வையையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
Issued by:
Hyundai Motor India Foundation
Plot No. H-1, SIPCOT Industrial Park
Irungattukottai, Sriperumbudur Taluk
Kancheepuram District, Tamil Nadu – 602 117.

