வாக்களிப்பதின் அவசியம் குறித்து காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தி கோஷமிட்டு பல்வேறு வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், குறித்த நேரத்தில் சென்று வாக்களிக்க வேண்டும், தனது வாக்கு உரிமையை அனைவரும் தவறாமல் வாக்களித்து நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணினி ஆசிரியர் வாலி சிறப்பாக செய்திருந்தார்.


