காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் G. சுப்ரமணி நினைவஞ்சலி

காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் G. சுப்ரமணி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி ஒட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் G. சுப்பிரமணி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் V சோமசுந்தரம் தலைமை தாங்கி சிறப்பு புஷ்பாஞ்சலி செய்து அன்னதானம் துவக்கி வைத்தார்.
இதில் மாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் ரவி, பாலாஜி துரைராஜ், பார்த்தசாரதி, பாரத், பிஜேபியை சேர்ந்த காந்தி, ஜீவானந்தம், சரவணன், கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் குடும்பத்தினர், பகுதி கழக நிர்வாகிகள், அப்பகுதிவாசிகள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

