காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் வெள்ளி ரத உற்சவம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் வெள்ளி ரத உற்சவம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் வெள்ளி ரத உற்சவத்தை ஒட்டி சிறப்பு வரிசைகள் தட்டுகள் மேளதாளங்களுடன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு வெள்ளி ரத உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு காமராஜர் வீதியில் உள்ள தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் இருந்து பூஜை பொருட்கள் பல வகைகள் அபிஷேகப் பொருட்கள் வஸ்திரங்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய வரிசை தட்டுகள் பூஜை செய்யப்பட்டு சங்கத் தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர் தலைமையில் பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து ஆலயத்திற்கு கொண்டு சென்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் சங்கத்தின் செயலாளர் சண்முகம் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் வெள்ளி ரத உற்சவ விழா குழு தலைவர் ஞான ஒளி செயலாளர் கலைமணி ஆகியோர் உறுப்பினர்களுடன் சேர்ந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மதியம் தொண்டை மண்டல திருமண மண்டபத்தில் சுமார் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் சிறப்பாக வெள்ளி ரத உற்சவத்தினை நடத்திட ஒத்துழைப்பு வழங்கிட பெற்றுக் கொண்டார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *