காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம் அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் காமாட்சி அம்பாள் உடனுறை முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யட்டும் மாலை மாற்றி மாங்கல்யதாரண சமர்ப்பித்து திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

பிரகாஷ் சில்க்ஸ் உபயத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பிரகாஷ் லட்சுமி தம்பதியினர் சங்கல்பம் செய்து விழாவினை துவக்கி வைத்தனர்.

தனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் வழங்கினர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதில் கடம்பன் தசரதன் பாலச்சந்தர் ஏகாம்பரம் ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து விழாவினை சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற்று சென்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *