காஞ்சிபுரம் மாவட்ட வி.சி.க. செயலாளர் வழக்கறிஞர் அருள்நாதன் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு ரத்ததான முகாம்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லூ. அருள்நாதன் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லூ. அருள் நாதன் பிறந்தநாளை பற்றி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.

இதில் ஏ வி ஆர் கோபி இளைஞர் அணி ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளமாறன், வழக்கறிஞர் கார்த்திக், விஜி, விக்கி, சந்துரு, நவீன் குமார், அஜித், கலியனூர் கிரி, பாக்யராஜ், விக்ரம், மகேஷ், வெற்றிவேல், ஹரிஷ் ஹரி, ஜீவானந்தம், சுதன் மற்றும் ஓரிக்கை உமேஷ், மதன், நவீன், சாலபோகம், சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.
கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி அவர்களுக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லூ.அருள்நாதன் சான்றுகள் வழங்கினார். தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.


