திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இராம.கருமாணிக்கம்தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இராம.கருமாணிக்கம்தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்இராம.கருமாணிக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு. இந்த தேர்தலில் முதல்வரே கதாநாயகன், மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் வெற்றி உறுதி என பரப்புரை

2026 சட்டமன்ற தேர்தலில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இராம.கருமாணிக்கம் ராமநாதபுரம் அச்சுந்தன் வயல், நொச்சி வயல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அச்சுந்தன் வயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உரையாற்றிய பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, “இந்த தேர்தலில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் கதாநாயகன், அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். முதல்வர் கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை கூறியே வாக்கு சேகரிப்பதாகவும், எத்தனை கட்சிகள் போட்டி போட்டாலும் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளதாகவும்” தெரிவித்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *