பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து மதுரையில்ஆர்ப்பாட்டம்
மதுரை மேற்கு நுழைவாயில் பகுதியில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில்
இருநூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டச் செயலாளர் ரபிக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், தொடர்ந்து ரயில்வேயை தனியார் மயமாக்கும் கொள்கைக்கு எதிராகவும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

