16 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!
பாபநாசம் அருகே மிளகாய் பொடியை தூவி 16 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹாஜாமைதீன். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் அவர், அதே ஊரைச் சேர்ந்த பெரிய தெருவில் காலனி வீடு கொண்டு கட்டி இருந்தார்.

இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு காலனி வீட்டில் இருந்து வந்தனர். அப்போது பூட்டிய வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்க முயன்றனர்.
அப்போது, திடீரென வீட்டுக்கு வந்த வீட்டின் உரிமையாளரான ஹாஜாமைதீன் மகன் மாலீக் இப்ராஹிமை தாக்கிவிட்டு, மாடிப்படிகள் முழுவதும் மிளகாய் பொடியை தூவியபடி கொள்ளையர்கள் தப்பியோடினர்.
தகவல் அறிந்த பாபநாசம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

