கும்பாபிஷேகம் எப்படி நடக்க வேண்டும்? – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் விளக்கம்

கும்பாபிஷேகம் எப்படி நடக்க வேண்டும்? – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் விளக்கம்

கும்பாபிஷேகம் எப்படி நடக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருக்கிறது, அதேபோன்றுதான் வரவேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகரில் உதாசின் பாவாஜி மடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இன்று குரு பூர்ணிமா முன்னிட்டு உலக நலனுக்காகவும், மன அமைதிக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும், உலகின் தலைசிறந்த குருவாகிய ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கும், கால பைரவருக்கும் மகா யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்திற்காக பெரிய கிணறு அளவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு,  1008 ஹோம திரவியங்கள், 108 பழம் மற்றும் பட்சணங்கள், பட்டு வஸ்திரங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டு வருகிறது யாகத்தின் இறுதியில் பைரவரின் எட்டு அவதாரத்திற்கு, 8 பூர்ணாஷுதி நடைபெற உள்ளது.

இந்த யாகத்தில் திரளான பக்தர்களும், பாஜக, இந்து முன்னணி அமைப்பினரும், பாவாஜி மடத்தின் கர்ஷினி சுவாமிகள், குருநாதர் அகஸ்தியஸ்ரீ அன்பு செழியன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப்பிரமணியன், “கும்பாபிஷேக விவகாரத்தில் அரசியல் வேண்டியது இல்லை”.

“கும்பாபிஷேகம் எப்படி நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளுக்கு ஏற்றவாறு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்”.

“கும்பாபிஷேகம் விவகாரத்தில் அரசியல் வேண்டியது இல்லை. கும்பாபிஷேகம் எப்படி நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வழிமுறைகள் இருக்கின்றன”.

“அந்த வழிமுறைகளுக்கு ஏற்றவாறு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். புதிதாக எதையும் கொண்டு வரக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்கிறார்கள்”.

“அரசாங்கம் கடவுள் நம்பிக்கை இல்லாத அரசாங்கம் தான். விநாயகர் சிலை வைக்க கூடாது என எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒன்று இரண்டு இடத்தில் தொடங்கியது இன்று லட்சக்கணக்கான இடங்களில் வைக்கப்படுகிறது”.

“இந்துவை மதிக்கவில்லை என்றால் மக்கள் மதிக்க மாட்டார்கள் என்ற சூழல் மாறி உள்ளது. விநாயகர் சக்தி விழா மிக விமர்சியாக நடைபெறும்” என தெரிவித்தார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *